Monday, December 14, 2009

கண்ணனைக் காணும் கண்கள்.




’பெண்கள் இருக்குமிடம்தான் கண்ணன் இருக்குமிடம்’ அவர்களோடுதான் பொழுதுக்கும் விளையாட்டு,அவர்களிடம் குறும்பு செய்து கொண்டிருப்பான். வாருங்கள் நாமும் சற்று எட்டிப் பார்ப்போம்.

அதோ, அங்கிருக்கும் தொட்டாசிணுங்கியின் முள்பட்டதுக் கூடத்தெரியாமல் பெண்கள் கூட்டத்தை நோக்கி ஓடுவது தெரிகிறதா?, ஆ...என்னமோ சொல்லுகிறாரே, அட!!! காதைக் கொஞ்சம் தீட்டுங்களேன்

//தொட்டு - உன்னைத்
துன்புறுத்தி
இன்புற்றவர்கள்
இங்கு ஏராளம் .//
எனச் சொல்லிக் கொண்டே போகிறார் பாருங்கள். அதுதான் அவரது தனித்துவமே.

ம்ம்ம்ம்.. கருணாகரசு கேளுங்க. எதைப் பத்தி சொல்லுறாரா?, ’நிர்வாணமாய் நீ’ அப்பிடின்னு தொட்டாசிணுங்கியப் பத்திச் சொல்லுறார்ங்க.
செடி என்னைக்கு சட்டப் போட்டிருக்குன்னு ஏடா கூடமா கேக்காதீங்க ஜமால், அங்க பாருங்க கலா என்ன சொல்லுறாங்கன்னு

//இந்தக் கண்கள் இருக்கே... அப்பப்பா...
செடி,பூக்களுக்குக் கூடத் துணி போட்டுத்தான்
மூடவேண்டும்//

பாவம் இவங்க, செடியைப் பத்திதான் சொல்லுறார்ன்னு நினைச்சிட்டாங்க.

ஹேமா தான் சரியாச் சொல்லுறாங்க அதைக் கேளுங்க கருணாகரசு.

//யாரையாச்சும் தொட்டுச் சிணுங்க வச்சு கவிதையா எழுதினாச் சரின்னு இருக்கு உங்களுக்கு.//

அந்தா, மஞ்சத் தாவணில இருக்கற பொண்ணுக்கிட்ட ஏதோ சொல்லுறாரு கேளுங்க..

//தண்ணீர் பாம்பை போல்
அவ்வபோது
நம்'முள்'ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
காதலை
என்ன செய்யலாம்...?//

அட நட்புதான்பா. கவிதை இன்பத்துக்காக அப்பிடி உதார் விடுறான்னு நினைச்சா, கலகலப்ரியா எப்பிடி உசுப்பேத்தாறாங்க பாருங்க.

//அண்ணே... பயப்டாதீங்கண்ணே நாம எல்லாம் எதுக்கிருக்கோம்...//

அட, நீங்க ஒன்னும் கேக்காதீங்க ஜமால், நான் கேட்டேன் அது ‘moral support only'யாம்.

இப்பிடிச் சொல்லிச் சொல்லியே அந்த ஆளூ முதுவ ரணகளமா ஆக்கிட்டாய்ங்க.

//இன்னுமா அடங்க மாட்டேங்கிற... பெருசு....அளப்பறையை குறச்சிக்கப்பு... இல்ல ஆப்பு!!!//.

ஏன் கருணாகரசு இப்பிடித் திட்டுறீங்க, இப்ப கண்ணன் என்ன சொல்லுறாரு பாருங்க

//பொது இடத்துல கூடவா இப்படி பேசறது//

[ யேய்ய்.... இதனால் சகலருக்கு தெரிவிப்பது என்னவென்றால்....கண்ணன் ஆண்களிடமும் பேசுவாரு......]

அங்கப் பாருங்க கலாவை. கண்ணு மூடிகிட்டாங்க என்னன்னுக் கேட்டா,

//இன்னும் எங்களுக்கு காதல்
வயது வரவில்லை .இன்னும் சின்னஞ்சிறுசுகள்.//

இதையே சொல்லிக் கிட்டு,நீங்களும் கண்ண மூடுங்க.

ஜமால், கண்ணத் தொறங்க, அங்கப் பாருங்க, ம்ம்ம்ம்ம்ம்....பதறாதீங்க, சும்மா அப்பிடித்தான் அழுவாரு, காரணம் கேட்டதுக்கு சொல்லுறாரு

//ஓய்ந்து
பாலுக்காக வீரிட்டு அழும்
பச்சிளங் குழந்தையைப் போல்
உன்
காதலுக்காக
வீரிட்டபடி...//

இவரு காதலுக்காக அழுறாரு, அந்தப் புள்ளயோட,பொண்ணு பாலுக்காக அழுவுது. கல்யாணமான பொண்ணுக்கிட்ட எப்படிங்க கேப்பாரா, என்ன ஜமால், அப்பாவியா இருக்கீங்க, அவரையே கேளுங்க. அங்கப் பாருங்க எவ்ளோ மெதுவா சொல்லுறாரு.உங்கக்கிட்ட இல்ல, அந்தப் புள்ளைக்கிட்ட.

//அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!//

அவருக்கிட்ட எப்பவும் இருக்கிறது என்ன? கருணாகரசு இப்படி கேக்குறீங்க.அவரே ஒருவாட்டி சொன்னாரு

//எப்போதும் உடனிருப்பது : இதுவரை உயிர்!//

அவரிடம் இல்லாதது என்னன்னு எனக்குத் தெரியும். அது மானம். மன்னிக்க. எழுத்துப் பிழை. 'மனம்' அப்பிடின்னு சொல்ல வந்தேன். அதைப் பொண்ணுங்கக்கிட்ட குடுத்துட்டாரு.

அப்படி இல்லங்க ,இதையெல்லாம் விடச் சொல்லி ஒருதடவை நான் சொல்லிப்பார்த்தேன். அதுக்கு என்ன சொன்னாரு தெரியுமா?

//இத்தனைக்காலம் பழகிப்போனதை
இனி மாற்றுவதெப்படி
என வினவும்
மனம் முடமாகிப் போன
மானங்கெட்ட இளைஞனா நீ?//

சரி கலா என்ன சொல்லுறாங்க தெரியுமா

//உங்களுக்கு மட்டுமா!! இவ்வளவா!!!
நம்பமுடியுமா??அதிசயமான மனிதரப்பா!!!!
இரண்டா?மூன்றா?? அதுதான்...இதயம்.
ஆளுக்கொன்று கொடுக்கிறீர்களே//

ஆமா... நாம கண்ணனைப் பற்றித்தானே பேசுறோம் - கருணாகரசு

இது கோபியருடன் சுற்றியலையும் கண்ணன். கீதை சொல்லும் கண்ணனப் பார்க்கணுமா? என்ன ஜமால் இப்படிக் கேக்குறாரு, ஹேமாவைக் மொதல்ல கேளுங்க யாரு இவருன்னு

// தன் காதலைத தானே சுமக்கும் அருமையான் காதலன் நீங்க//

அட கண்ணனைக் காணும் கண்கள் அப்பிடின்னு சொல்லிப்புட்டு....

’என்ன தவம் செய்தனை’[ராகம்: காப்பி , தாளம்: ஆதி,இயற்றியவர்:பாபநாசம் சிவன்] நாம் பார்த்தது யசோதாவைப் பற்றியல்ல, அவரது வளர்ப்பு மகன் கண்ணனைப் பற்றி, அவனது லீலைகளைப் பற்றி...

மண்ணைத் தின்றான் என பலராமனும், மற்றவர்களும் கூற யசோதா கண்ணனை வாயைப் பார்க்க வாயை திறக்கச் சொன்னாள்.அதில் அவளுக்கு அண்ட சராசரங்களும், பலப்பல கண்டங்களும் தெரிந்தன. அதைக் கண்ணன் உடனே மறக்கச் செய்தான். அதனால்தான் பல ஞானிகளும்,முனிவர்களும் ’கிருஷ்ணா நீ பேகனே பாரோ’ [ராகம்: யமுனா கல்யாணி,தாளம்: மிஸ்ரசபு, இயற்றியவர்:வியாசராயர்] கெஞ்சுகின்றனர். நீங்களும் கெஞ்ச வேண்டுமானால்,கோபியர் நடுவேக் [ஆம்பளைக்கு ‘நோ எண்ட்ரி’]காணமுடியும்.

டிஸ்கி 1:
கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் உண்மையானவையே. இது கற்பனை அன்று. உண்மை....உண்மை...முற்றிலும் உண்மை.

டிஸ்கி 2:
எழுதத் தூண்டிய ஜமாலுக்கு என் நன்றி.

டிஸ்கி 3:
ஆதாரம்: மனவிழி யில் பதிவுகளாகவும், உரையாடல் அவர்கள் பின்னூட்டங்களாகவும்..

56 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்க

SUFFIX said...

பிச்சி மேய்ஞ்சிட்டிங்க, தலைப்பு நல்லா இருக்கு!!

gayathri said...

nalla comedy panni iurkega anna

SUFFIX said...

//டிஸ்கி 2:
எழுதத் தூண்டிய ஜமாலுக்கு என் நன்றி.//

இப்படிதான்யா உசுப்பு ஏத்தி விடுவாரு அந்த நல்லவரு!!

நட்புடன் ஜமால் said...

ஏன் ஷஃபி ஏன் ...

S.A. நவாஸுதீன் said...

ramheartkannan எங்கிருந்தாலும் அரங்கத்திற்கு வருமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

S.A. நவாஸுதீன் said...

///டிஸ்கி 2:
எழுதத் தூண்டிய ஜமாலுக்கு என் நன்றி.///

பரட்டை..............

S.A. நவாஸுதீன் said...

///இப்பிடிச் சொல்லிச் சொல்லியே அந்த ஆளூ முதுவ ரணகளமா ஆக்கிட்டாய்ங்க///

இங்கேயும் ஆயிட்டுருக்கோன்னு ஒரு சந்தேகம்.

S.A. நவாஸுதீன் said...

கண்ணா........ வருவாயா
அரங்கப்பெருமாள்.........கேட்க்கிறார்.

நட்புடன் ஜமால் said...

S.A. நவாஸுதீன் said...

///டிஸ்கி 2:
எழுதத் தூண்டிய ஜமாலுக்கு என் நன்றி.///

பரட்டை..............
]]

நல்லா யோசிச்சி பாரு அது யாருன்னு

சந்தேகமிருந்தால் ‘வலைச்சர’த்தை பாரு(வசந்த் தொகுப்பு)

SUFFIX said...

நிஜமாவே, உண்மையிலேயே அரங்கத்தில் கும்மியா...

நட்புடன் ஜமால் said...

அட ஆமாப்பா ஆமாம்

மீரா வேதரெத்தினம் said...

அண்ணே கலக்குறீங்க போங்க!

அரங்கப்பெருமாள் said...

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் எதோ, திட்ட வேண்டுமென்றோ,கும்மியடிக்க(நன்றிம் ஷஃபி) வேண்டுமென்றோ இதை செய்ய வில்லை.

மார்கழி மாசம், ஆண்டாள் பாடிய திருப்பாவைப் ப்ற்றி எழுத நினைத்தேன்,கண்ணனைப் பற்றி சொல்ல எண்ணினேன்.

தண்ணியில்.... மன்னிக்க, தனியாக இருந்ததால் எழுதிய அனைத்தும், அந்த புண்ணியாவானுக்கேச் சொந்தம்


புண்ணியவான் -- ஜமால் அல்ல.

அரங்கப்பெருமாள் said...

//நட்புடன் ஜமால் said...
ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்க
//

யாரு நாங்க... ஒங்களுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரியே சொல்லுறீங்களே.

அரங்கப்பெருமாள் said...

//இப்படிதான்யா உசுப்பு ஏத்தி விடுவாரு அந்த நல்லவரு!!///

இது மொதல்ல தெரியாம இருந்திருக்கேனே.
வடப் போச்சே....

//உண்மையிலேயே அரங்கத்தில் கும்மியா.//

நீங்க வேற தூண்டிவிடுறீங்களா? சாந்தப் படுத்துவீங்கன்னுப் பார்த்தா....

அரங்கப்பெருமாள் said...

//S.A. நவாஸுதீன் said...
ramheartkannan எங்கிருந்தாலும் அரங்கத்திற்கு வருமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்//

ஆம்...ஆம்...

//கண்ணா........ வருவாயா
அரங்கப்பெருமாள்.........கேட்க்கிறார்.
//
இப்பதானங்க மைக்ல சத்தம் போட்டுக் கூப்பிட்டிங்க... நான் தனிமரமல்ல தோப்பு..

அரங்கப்பெருமாள் said...

//gayathri said...
nalla comedy panni iurkega anna//

தாயி... நான் சொன்னதெல்லாம் உண்மை.நீங்க என்னைய வச்சு காமடி,கீமடி பண்ணலையே!!

அரங்கப்பெருமாள் said...

//S.A. நவாஸுதீன் said...
///டிஸ்கி 2:
எழுதத் தூண்டிய ஜமாலுக்கு என் நன்றி.///

பரட்டை..............//

no bad words... ஜமால் பாவம்.

அரங்கப்பெருமாள் said...

//மீரா வேதரெத்தினம் said...
அண்ணே கலக்குறீங்க போங்க//

உனக்குத்தான் தெரியுமே,அண்ண எப்பவும் உண்மையைத்தான் பேசுவான்.சில நேரங்கல்ல இப்படிச் ச்த்தம் போட்டு சொல்லுவேன்.

Hari said...

Super பெருமாள்.

நான் Area-ku புதுசு..

அன்புடன் நான் said...

எனக்கு பிடித்த கமல் படத்த வெளியீடு அன்றே முதல் காட்சி பார்த்த திருப்தி.

கண்ணா ... முகத்தில் கிடக்கும் திரைச்சீலையை..... மன்னிக்க திரையை விளக்கி விட்டு அரங்கத்திற்கு வரவும்.

அன்புடன் நான் said...

சிறிதும் கற்பனையில்லாத உண்மைப்படம். எனக்கு ரொம்ப ரொம்ப... பிடிச்சிருக்கு.

அன்புடன் நான் said...

பூனைக்கு மணிக்கட்டிய புண்னியவானுக்கு நன்றி.

அன்புடன் நான் said...

இவ்வளவு யதார்த்தம் வேண்டாம்... கொஞ்சம் நகைச்சுவை கலந்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

அன்புடன் நான் said...

அது எங்கேயாவது... கோகுலத்தில் திரிந்துக்கொண்டிருக்கும் என் நம்புகிறேன்.... அரங்க பெருமாள். ( அவர் கோகுலத்தில் திரிவார் என்பதில் அவ்வளவு கிக் இல்லாததால் “அது” )

அன்புடன் நான் said...

கருப்பா.... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு பாப்பாரே அவரத்தானே சொல்றிங்க????

அன்புடன் நான் said...

இவ்வளவு ரவுண்டுக்கட்டியும்... பயப்புள்லைய.... இன்னும் காணுமே?????

அன்புடன் நான் said...

எங்கேயாவது “மகளிர்” காவல் நிலையத்தில் புகார் அளிக்க போயிருப்பாரோ..... ????
( கவனிக்க...... மகளிர் காவல் நிலையம் )

அரங்கப்பெருமாள் said...

என்ன கருணாகரசு.. வெளுத்து வாங்குறிங்களே!!!

//சிறிதும் கற்பனையில்லாத உண்மைப்படம். எனக்கு ரொம்ப ரொம்ப... பிடிச்சிருக்கு//

உண்மைப் பேசுறதுதானே நம்ம பழக்கம். மிக நன்றி.

// கொஞ்சம் நகைச்சுவை கலந்திருக்கலாம்//
உண்மை வெளி வராமல் போயிவிடுமே என்றுதான் நகைச்சுவை கலக்கவில்லை ( ஆனாலும் ....)

//ரவுண்டுக்கட்டியும்... பயப்புள்லைய.... இன்னும் காணுமே//

எவள நேரம், எத்தன பேரு, ம்ம்ம்ம்... ஆளக் காணுமே!!!

//புகார் அளிக்க போயிருப்பாரோ....//

அவர் மேலே புகார் இருப்பதாக கேள்வி.

Kala said...

என்ன!! அரசு சபையில ரொம்ம..ரொம்ப பின்பாட்டு
கேட்கிறப்போல...” இராகம்” குரலிலும் தொனியிலும்
ஐக்கியமாகிவிட்டதால்.......இப்படித் துள்ளித்,துள்ளிப்
படிக்கத் தோணுதோ!!அவ்வளவு தைரியம்
“அந்த” இராகம் கொடுத்திருக்கா?? பார்கலாம்!பார்க்கலாம்!!

எல்லாருக்கும் வந்து..வந்து....அப்புறமா கவனிச்சுக்கிறன்

என் கண்ணணைப் பற்றி இவ்வளவு பொறாமை!!
அந்த லீலைகள் உங்களால் செய்யமுடியாது
{யாரும் இல்லை,திறமை இல்லை}என்றுதானே!
இவ்வளவு கடுப்பு.
“அவர்” அழகானவர்,திறமையுள்ளவர்,வசிகரமானவர்,
மயக்கும் நிறமும்.கவரும் தன்மையும் அதனால்.......
பக்தர்களுக்கு “பக்தி”அதிகம் இவரிடம் இது தப்பா?
{இவை அனைத்தும் வீராப்பாய் பேசுபவர்களிடம்
இல்லை என்ற ஆதங்கம்தான்!!}

இன்னும் ..இருக்கு............அப்புறம்.....

அரங்கப்பெருமாள் said...

//என் கண்ணணைப் பற்றி இவ்வளவு பொறாமை!!
அந்த லீலைகள் உங்களால் செய்யமுடியாது//

பண்ணிட்டாலும்... தாங்க முடியலையே.

//அழகானவர்,திறமையுள்ளவர்,வசிகரமானவர்,
மயக்கும் நிறமும்.கவரும் தன்மையும் அதனால்......//

இப்பிடி சொல்லிச் சொல்லியே உடம்பு ரணகளமா ஆயிடுச்சே.

//பக்தர்களுக்கு “பக்தி”அதிகம் இவரிடம் இது தப்பா?//

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது!!!

அன்புடன் நான் said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே அவர் ரொம்ப நல்லவரா இருக்குறாரே...

அன்புடன் நான் said...

கண்ணா அரங்கத்துக்கு வா.... இல்ல அசர அசர அடிக்கவா???

அன்புடன் நான் said...

மயக்கம் தெளியட்டும்... அப்புறம் வரன்.

அன்புடன் நான் said...

மனுசனுக்கு பொறுமையிருக்கலாம்.... பொறுமையே மனுசனா இருக்க கூடாது.... கண்ணா வெளியே வா!

அன்புடன் நான் said...

கண்ணா..............
நாலஞ்சி நாளா அடிவாங்குறியே... கொஞ்சம் கூட வலிக்கல... ?

அன்புடன் நான் said...

பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு.... உன்னோட பொறுமைக்கு அல்ல! எங்களோட பொறுமைக்கு..... வெளியே வா!

அன்புடன் நான் said...

அட போய்யா.... அடிச்சி... அடிச்சி கையே அசந்து போச்சி....
அட போய்யா.

அரங்கப்பெருமாள் said...

என்னாப் பொறுமை!!!...
அவர் நாண நன்னயம் செய்து விடல்.

நட்புடன் ஜமால் said...

கருணையே உருவான கருணா - நீங்களா இப்படி

அன்புடன் நான் said...

கண்ணா ... இன்னும அடிக்கமாட்டோம் வா.

அன்புடன் நான் said...

நட்புடன் ஜமால் said...
கருணையே உருவான கருணா - நீங்களா இப்படி//
அது சிக்குற ஆள பொறுத்து.....
உங்களுக்கு தெரிஞ்ச ஆள் யாராவது இருக்காங்களா?.... அப்படியே ஒரு மீன் பாடி வண்டியில போட்டு அனுப்பி வைத்த அவங்களும் கொஞ்சம் அடிச்சி அனுப்புவாங்கல?

இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்.... ஒருத்தன்(ர்) சிக்கியிருக்கிறான்(ர்)
அடிச்சி பழகுறவங்க பழகிக்கலாம்!!!

சத்ரியன் said...

கடந்த சில நாட்களாக "வைரஸ் காய்ச்சல்" .மிகக்கடுமையான பாதிப்பினால் சில உறுப்புகள் செயலிழந்தே போய்விட்டன , என் கணினிக்கு. அதனால, எந்த பக்கமும் தலை காட்ட முடியல...இதுதான் உண்மை.

என்னைப்பற்றி இவ்வளவு "அற்புதமாக" ஒரு இடுகைப் போட்டு பெருமை(!)ப் படுத்தியிருக்கும் நண்பர் "அரங்க‌பெருமாளுக்கும்",

இந்த அரிய வாய்ப்பை மிகத் திறமையாகக் கையாண்டு பின்னூட்டத்தில் பிண்ணிப் பெடலெடுத்திருக்கும் எனதருமை குருநாதருமான, எனது (கோகுலத்துக்கும்)வழி காட்டியுமான, எனக்கு மட்டும் "மாமா"வுமான, இன்னும் என்னென்னவுமோ ...."மான", எனது நண்பருமான உயர்திரு.கருணாகரசு அவர்களுக்கும்

எனது உளம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும் !

சத்ரியன் said...

//பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு.... உன்னோட பொறுமைக்கு அல்ல! எங்களோட பொறுமைக்கு..... வெளியே வா!//

ந‌ண்பா,மாமா,குருவே,திருவே....,

சில‌ நேர‌ங்க‌ளில், (க‌டுமையான) காய‌ங்க‌ளுக்கு "காலமும்,மெளன‌மும் தான் மிக‌ச்சிற‌ந்த‌ ம‌ருந்து", என்று ஒரு ந‌ண்ப‌ர் சொன்ன‌தாக‌ ந‌ல்ல‌ ஞாப‌க‌ம்.

அன்புடன் நான் said...

//எனது (கோகுலத்துக்கும்)வழி காட்டியுமான//

அடப்பாவி.... நான் அப்பாவி!!!

அரங்கப்பெருமாள் said...

ம்ம்ம்... இந்த வலையில நிறய பேரு சிக்குவாங்க போல இருக்கு.

இது கூட்டுக் களவானித்தனமா இருக்கும் போலிருக்கு.

ஹேமா said...

அச்சோ....அச்சோ....இவ்வளவும் இங்க நடந்திருக்கா !நம்பவே முடியலயே.எங்க அந்தக் கருப்புச் சிங்கம்.கருப்புத் தங்கம்.கண்ணழகன்.
பெருமாள் சேதி சொல்லுங்க.

புலவன் புலிகேசி said...

கண்ணன் அப்புடின்னு ஒருத்தன் இருந்தது உண்மைன்னா அவனை பிரேமானந்தாவ சிறையிலடைத்தாற்போல் அடைக்க வேண்டும்..பொண்ணுங்க கூட சுத்துறவன்லாம் கடவுளாம்...பின்னிட்டீங்க தல

அரங்கப்பெருமாள் said...

//கருப்புச் சிங்கம்.கருப்புத் தங்கம்//

சும்மாதானே சொல்லுறீங்க.

அரங்கப்பெருமாள் said...

//சிறையிலடைத்தாற்போல் அடைக்க வேண்டும்//

வாங்கண்ணே... வணக்கம்.
அட இந்த யோசனை இல்லாம போச்சே.

சத்ரியன் said...

//எங்க அந்தக் கருப்புச் சிங்கம்.கருப்புத் தங்கம்.கண்ணழகன்.//

ஹேமா,

இதுல ”வ.பு.அணி இலக்கணம்” பயன்படுத்தலை தானே?

//பெருமாள் சேதி சொல்லுங்க.//

ஏன் ஹேமா,

இதுவரைக்கும் சொல்லியிருக்கிற சேதி போதலையோ?

சத்ரியன் said...

////சிறையிலடைத்தாற்போல் அடைக்க வேண்டும்//

வாங்கண்ணே... வணக்கம்.
அட இந்த யோசனை இல்லாம போச்சே.//

ஏன் சாமி இப்பிடியெல்லாம்?

ஏற்கனவே சிறைப்பட்ட சிங்கத்தை எத்தன தடவதான் அ(டி)டைப்பீங்க...?

thiyaa said...

ஏன்?????

நினைவுகளுடன் -நிகே- said...

தலைப்பு நல்லா இருக்கு!

கமலேஷ் said...

கலக்கு கலக்குன்னு கலகுரிங்க...வாழ்த்துக்கள்..