Thursday, November 12, 2009

சில நாட்கள் தேவை.....

அன்புள்ள வலை நண்பர்களே...
வெகு நாட்களாக நான் இந்தப் பக்கம் வருவதை நிறுத்தி விட்டேன். அதற்கு காரணம் உண்டு.
அக்டோபர் 12ந் தேதி மாலை 4:30 மணியளவில் எனது அலைபேசி ஒலித்தது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 3:00, குழப்பத்துடன் எடுத்தேன்.பேசியது எனது தந்தை. பேரிடியாக ஒரு தகவல் தந்தார். எனது சகோதரன் எங்களை விட்டுப் பிரிந்ததாகச் சொன்ன போது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது சகோதரர்(வயது 40), சிங்கப்பூரில் உள்ள தேசியப் புற்று நோய் கழகத்தில், விஞ்ஞானியாக பணியாற்றினார்.எதைப்பற்றி ஆராய்ச்சி செய்தாரோ அதே புற்று நோயால் உலகையும் எங்களையும் விட்டுப் பிரிந்தார்.எனவே நான் இந்தியாச் சென்று திரும்பியிருக்கிறேன்.இன்னும் அதிர்ச்சி மீளாமல் இருக்கிறேன்.

என்னைக் காணாமல் தேடிய நல் உள்ளங்களுக்கு(குறிப்பாக தோழர் கருணாகரசு அவர்களுக்கு) நன்றி.மீண்டு(ம்) வருவேன்.முன் போல் தொடருவேன் இன்னும் சில நாட்களில்.....

9 comments:

அன்புடன் நான் said...

தங்களின் உடன்பிறப்பின் மரணச்செய்தி அதிர்ச்சியை ஏற்ப்படுத்திவிட்டது. உங்களை காணாதது வருத்தமாக இருந்தது...வேலை பளு அதிகம் என்று நினைத்தேன், இப்படி ஒரு செய்தியை தங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. நடந்ததிலிருந்து மீண்டு வாங்கண்ண. அண்ணனுக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Kala said...

கருணாகரசு,சத்ரியன் ஹேமாவின்
வலைத் தளத்தில் உங்களைக் காணவில்லை
ஏன்? என நான் நினைத்ததுண்டு ,கருணாகரசின்
வலைத்தளத்தில்{பின்னோட்டத்தில்}பார்த்த
பிறகுதான் அறிந்தேன்
தாங்கமுடியாத,மறக்கமுடியாத,ஏற்கமுடியாத
அதிர்ச்சிதான்! இருந்தாலும் ...
துக்கந்தான்!மனதை திடப்படுத்துங்கள்.
அவர்ஆத்மா சாந்தியடைய...
நான், ஹேமா ,கருணாகரசு,சத்ரியன்
மற்றும்...அனைவரும் பிராத்திக்கின்றோம்.
கலக்கமும் கண்ணீரும் வேண்டாம்.

அரங்கப்பெருமாள் said...

மிகவும் நன்றி கருணாகரசு மற்றும் கலா அவர்களே...

ஹேமா said...

பெருமாள்,உங்கள் துக்கத்தோடு இந்தத் தோழியின் கைகளையும் இறுக்கியபடி.உங்களைச் சிலசமயங்கள் நினைத்து உங்கள் தளம் வந்து பார்த்தும் போயிருக்கிறேன்.இப்படி ஒரு துக்கம் தாங்கமுடியாமல் உங்க தளம் அதிர்வடைந்து கிடப்பதை கலா சொல்ல நான் அதிர்ந்துவிட்டேன்.தொடரும் வாழ்வில் அமைதிடையுங்கள்.அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வொம்.

அரங்கப்பெருமாள் said...

நன்றி ஹேமா.உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது.துக்கத்தில் தோள் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி...

விக்னேஷ்வரி said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மனதிற்கு மிக வருத்தமாக உள்ளது. சீக்கிரம் மீண்டு வாருங்கள். எங்கள் பிரார்த்தனைகள் உங்களோடு.

அரங்கப்பெருமாள் said...

நன்றி விக்னேஷ்வரி. மீண்டேன். வழக்கம்போல் தொடருகிறேன்.

இரசிகை said...

:(

meendu vaarungal...

Meera said...

எதிர்பார்க்காத ஒன்று :(