நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.
நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?
இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.
டிஸ்கி 1:
நன்றி ஹேமா.
நான் எழுதுவதே மிக அரிது. உங்களால்தான் இதைக் கூட யோசித்தேன்.
37 comments:
"என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல" - அன்னே நல்ல ஒரு உணர்வு.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் ...........Thank you, Hema. We got a nice one because of you.
பலருக்கு எழுத தெரியும் ஆனால் ஒரு தூண்டு கோல் தேவை படுகின்றது.
நன்றி ஹேமா.
தூள் வாசகரே.
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.]]
தேர்ந்துகிட்டு வாறியள் - நமக்கும் கற்று கொடுங்கள்
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள்]]
க்ளாஸ் ...
நன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்
///குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .///
///அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.///
பின்றீங்களே அரங்கப்பெருமாள். அருமை அருமை
///பட்டுக்கோட்டைப் பக்கம், தஞ்சை மண்ணிலிருந்து.///
அப்போ அதிரைக்கும் பக்கம்தான்! எங்கே?
attakasam kavithai
~Annam
//குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .//
அரங்க பெருமாள்,
அசத்திட்டேள் போங்கோ...!
கை குடுங்கோ..!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமைங்க..
//மீரா வேதரெத்தினம் said...
"என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல" - அன்னே நல்ல ஒரு உணர்வு//
நன்றி தங்கச்சி..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//Chitra said...
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் ...........Thank you, Hema. We got a nice one because of you.//
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள் அம்மணி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//நட்புடன் ஜமால் said...
பலருக்கு எழுத தெரியும் ஆனால் ஒரு தூண்டு கோல் தேவை படுகின்றது.
நன்றி ஹேமா.
தூள் வாசகரே//
நீங்களும்தான் ஊக்கம் கொடுத்தீர்கள். பாராட்டுக்கு மிக்க நன்றி
//நட்புடன் ஜமால் said...
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.]]
தேர்ந்துகிட்டு வாறியள் - நமக்கும் கற்று கொடுங்கள்//
நான் கற்பித்தலும் கற்றலே என்கிறீர்கள்.நீங்கள் தான் கற்பிக்கிறீர்கள்.நான் இன்னும் மாணவன் தான் என்பதை உணரவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//கவிக்கிழவன் said...
நன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்//
கருத்துக்கு நன்றி யாதவன். நிச்சயம் முயற்சிக்கிறேன்.தங்களின் பாராட்டு என்னை எழுதத் தூண்டுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//S.A. நவாஸுதீன் said...
///குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .///
///அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.///
பின்றீங்களே அரங்கப்பெருமாள். அருமை அருமை//
இயலாமைதான். அந்த நேரத்தில் யாராவது எதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
பாராட்டியமைக்கு நன்றிகள் பல
//S.A. நவாஸுதீன் said...
///பட்டுக்கோட்டைப் பக்கம், தஞ்சை மண்ணிலிருந்து.///
அப்போ அதிரைக்கும் பக்கம்தான்! எங்கே?
ஆமாம். தாமரங்கோட்டை. காவல் நிலையம்,பதிவுத்துறை எல்லாத்துக்கும் அதிரைக்குத்தானே வரனும்.
//Anonymous said...
attakasam kavithai
~Annam//
அன்னம் பாலிருந்து நீரைப் பிரிக்கும். எனவே நீங்க இப்படிச் சொல்லி,பாராட்டியதற்கு மிக நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//சத்ரியன் said...
//குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .//
அரங்க பெருமாள்,
அசத்திட்டேள் போங்கோ...!
கை குடுங்கோ..!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//
ரொம்ப நன்றி சத்ரியன்.உங்கள் பாராட்டு என்னை இன்னும் எழுதத் தூண்டும்.
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//புலவன் புலிகேசி said...
அருமைங்க..//
மகிழ்ச்சி,நன்றிகள் பல
பாருங்க பெருமாள்....எழுதத் தெரில சொன்னீங்களே.எத்தனை வாழ்த்துக்களும் ஊக்கமும் கிடைச்சிருக்கு.
சந்தோஷமாயிருக்கு எனக்கு.
இன்னமும் முயற்சி பண்ணுங்க அண்ணா
இன்னமும் நல்லா வரும் வாழ்த்துகள்
\\\\என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.\\
பெருமாள்!! என்ன! கொசு மட்டுந்தானா!!??
வெறுக்கும் போது என்னை
அலட்சியப்படுத்தி விட்டுச்
செல்கின்றன\\\\
பாவம் பெருமாள் அப்படியெல்லாம்
செய்யக் கூடாது என்று சொல்லி
வைத்திருக்கின்றேன்.எல்லாம் நல்ல
விதமாக நடக்கும் கவலைப்பட
வேண்டாம்.
\\\\நான் விரும்பும் அந்தச் சித்திரப்
பாவை போல
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம்
மிகுவதில்லை\\\\
ஓகோ...சத்ரியனுக்கு நீங்க அண்ணணா?
தம்பியா? பாவம்! ஆத்துக்காரி,தெரியுமோணா
இந்த விசயம்?
அப்புறம் ...ஆண்கள் மனமே அப்படித்தான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்!!
என்று பாட ஆரம்பிச்சுட்டா......????
//ஹேமா said...
பாருங்க பெருமாள்....எழுதத் தெரில சொன்னீங்களே.எத்தனை வாழ்த்துக்களும் ஊக்கமும் கிடைச்சிருக்கு.
சந்தோஷமாயிருக்கு எனக்கு.//
உங்கள் அழைப்புதான் இப்படி எழுத வைத்திருக்கும் போது இதை உங்களுக்கு கொடுக்கப்பட்டது என்றுதான் எண்ணுகிறேன். எனக்கும் சந்தோஷமாயிருக்கு
பெருமாள், கவிதை சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
//பாலா said...
இன்னமும் முயற்சி பண்ணுங்க அண்ணா
இன்னமும் நல்லா வரும் வாழ்த்துகள்//
கண்டிப்பா முயற்சி செய்கிறேன்.
நன்றி பாலா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//கலா said...
பெருமாள்!! என்ன! கொசு மட்டுந்தானா!!??//
நல்லக் கேள்வி,பதில் அனைவருக்கும் தெரியுமே!!
//பாவம் பெருமாள் அப்படியெல்லாம்
செய்யக் கூடாது என்று சொல்லி
வைத்திருக்கின்றேன்.எல்லாம் நல்ல
விதமாக நடக்கும் கவலைப்பட
வேண்டாம்.//
நன்றி..உங்களை நம்புகிறேன்
//ஓகோ...சத்ரியனுக்கு நீங்க அண்ணணா?
தம்பியா?//
சத்ரியன் மலை நான் மடு.
// பாவம்! ஆத்துக்காரி,தெரியுமோணா
இந்த விசயம்? //
என்ன இப்படி சொல்லீடீங்க. அந்தச் சித்திரப் பாவையே,என் ஆத்துக்காரி தானே (அப்பாடா, எப்படியோ தப்பிச்சேன்).
//அப்புறம் ...ஆண்கள் மனமே அப்படித்தான்
அது அடிக்கடி மாறும் இப்படித்தான்!!
என்று பாட ஆரம்பிச்சுட்டா......???//
இக்கேள்வியைச் சத்ரியனுக்கு ஃபார்வ்ர்டு செய்கிறேன்.
//கோபிநாத் said...
பெருமாள், கவிதை சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி//
நன்றி கோபி.தொடர்ந்து எழுதணும். எங்க மூளை ஒத்துழைக்க மாட்டங்கிது.
////ஓகோ...சத்ரியனுக்கு நீங்க அண்ணணா? தம்பியா?//
சத்ரியன் மலை நான் மடு.
அரங்கபெருமாள்,
ஏன் இப்படியெல்லாம் எனக்கே....?
////அப்புறம் ... ஆண்கள் மனமே அப்படித்தான்; அது அடிக்கடி மாறும் இப்படித்தான்!!
என்று பாட ஆரம்பிச்சுட்டா......???//
இக்கேள்வியைச் சத்ரியனுக்கு ஃபார்வ்ர்டு செய்கிறேன்.//
மச்சான்,
இதெல்லாம் நல்லாவா இருக்க்க்க்கு...?
உங்க சட்டியில இருந்தா பரிமாருங்க. விருந்துக்கு வந்தவியள , அடுத்த வீட்டுல விருந்து அங்க போங்கன்னு அனுப்பினா எப்பிடி?
இதெல்லாம் சரி பட்டு வராது. தங்கச்சிக்கு போன் போடுறேன்.
நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி
இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
அந்தப்படத்தப்பார்க்கும்போது மனசு .. ஒண்ணும் சொல்ல்ல முடியலே........
இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் //
தங்களின் எழுத்து ரசிக்கும்படியுள்ளது...... தொடருங்க ..... அவ்வபோது வர ஒயலாமைக்கு வருந்துகிறேன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நிம்மல் எங்கே இருக்கான்.
kudukuduppai@gmail.com
மிகவும் நன்றாக இருக்கிறது தோழரே...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...
beautiful words! keep writing!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
இந்த வூட்டுல ஆள காணுமே..... நாளைக்கு வந்து பார்ப்போம்.
நீங்க வரலைன்னா....
வாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப.... என்கின்ற இந்த தளம் ஏலம் விடப்படும்.
ஏங்க அரங்கத்திற்கு வாரீங்களா?
இல்ல இந்த தளத்த ஏலம் விடவா?
ஏங்க ஒரு மின் மடலாவது அனுப்பலாமுல்ல?
என்னங்க... இன்னும் காணும்?
எப்ப வலையுகத்துக்கு... வருவிங்க?
எதிர்பார்ப்போடு...... அன்புடன்...நான்.
பொறுமைக்கும் எல்லையுண்டு.....
come often in ur blog permaal !
Post a Comment