Tuesday, August 18, 2009

தேவை பாவை பார்வை



நீ வரும் நேரத்திற்காக காத்திருக்கும் கணம்,
உன் வருகைக்காக காத்திருந்து கலவரப்படும் மனம்;
நீ வரும் வழி நோக்கி பூத்திருக்கும் என் விழி;
உன் வருகை தாமதமானதால் என்னுள் எழும் கோபம்,
நீ உரசி நடக்கையில் என்னுள் எழும் தாபம்;
எதை எதையோ உளறி கொட்டும் என் எண்ணம்
எல்லாம் கேட்டு சிவந்து நிற்கும் உன் கண்ணம்;
கிளம்பும் தருணத்தில் உடைந்து நிற்கும் என் உள்ளம்,
நாளையப் பொழுத்திற்காக தவமிருக்கும் இரவு,
முத்தம் நினைத்து நித்தம் ஒரு கவிதை....
என நானும் மகிழ்ந்திருப்பேன் எனக்கும்
ஒரு காதலி கிடைத்திருந்தால்!!!......


பி.கு
----
சத்ரியனால் மட்டும் எப்படி உருகி எழுதமுடிகிறது என சிந்தித்தேன்...

7 comments:

ஹேமா said...

சரியாப்போச்சு,சத்ரியன் உங்களையும் இப்பிடி ஆக்கிடாரா !கற்பனை அற்புதம்.

வணக்கம் பெருமாள்.உங்கள் பக்கம் வந்தேன்.
நல்லாயிருக்கு.கீழே விளம்பரங்கள் அசத்தல்

அரங்கப்பெருமாள் said...

வணக்கம் ஹேமா.. வாங்க.. அவரால மட்டும் எப்பிடி முடியுதுன்னு நினைச்சா,தப்பு என் பக்கம். அதான் சத்தம் போட்டு சொன்னேன்.
நன்றி தங்கள் கருத்துக்கு.மீண்டும் வருக.

சத்ரியன் said...

//...முத்தம் நினைத்து நித்தம் ஒரு கவிதை....
என நானும் மகிழ்ந்திருப்பேன் எனக்கும்
ஒரு காதலி கிடைத்திருந்தால்!!!......///

பெருமாள்,

இதைத்தான் எதிர்ப்பார்த்தேன். எழுதனும்.அது காதலைப்பற்றியோ, கடவுளைப் பற்றியோ...! எண்ணப்பகிர்தல் இருக்கனும்.

கலக்கலா இருக்கு. நீங்க U.S ‍ ல தானே இருக்கீங்க.அப்புறம் என்ன, "ஒரு காதலி கிடைத்திருந்தால்...!? (இது மட்டும் வீட்டுல தெரிஞ்சிருந்தா....?)

சத்ரியன் said...

//சரியாப்போச்சு,சத்ரியன் உங்களையும் இப்பிடி ஆக்கிடாரா !//

பெருமாள்,

ஹேமாகிட்ட எடுத்துச் சொல்லுங்க. நான் உங்களை அப்படி ஆக்கலைன்னு.
காதல் எல்லாருக்குள்ளேயுந்தானே இருக்கு?

(ஹேமாவின் காதல் கவிதைகளைப் (கடிதங்களை அல்ல) படிக்க இரு கண்கள் மட்டும் போதாது என்பது உங்களுக்கேத் தெரியுந்தானே?)

அன்புடன் நான் said...

காதல் கவிதை மிக அருமை.
காதலை காதலித்தால் அனைவருக்குமே கவிதை மிக அழகாய் வரும். கவிதைக்கு பாராட்டுக்கள்.

அரங்கப்பெருமாள் said...

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்

மீரா வேதரெத்தினம் said...

அண்ணன்,
கவிதை அருமை..
"நீ வரும் வழி நோக்கி பூத்திருக்கும் என் விழி;
உன் வருகை தாமதமானதால் என்னுள் எழும் கோபம்"
நீங்கள் கோபபட்டு நான் பர்ததுது இல்லை! :)